27.6 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

PN தொகுதி பங்கீட்டு முடிவை முந்தி அறிவிக்க வேண்டாம் – Wawasan கட்சிக்கு PAS எச்சரிக்கை!

🔥 Views : 2,019
👁 Reading Now : 31

மலாக்கா மாநிலத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைமையின் முடிவை முந்தி கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும், கூட்டணியின் தலைமை மற்றும் பேச்சுவார்த்தை நடைமுறையை மதிக்க வேண்டும் என்றும் மலாக்கா PAS தலைவர் ஒருவர் Wawasan கட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

PAS மலாக்கா அரசியல் குழு உறுப்பினரும் ஜாசின் PAS தலைவருமான கமாருடின் சிடெக், PN மற்றும் தேசிய முன்னணி (BN) இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

Wawasan அவசரப்பட்டு எந்த முடிவையும் முந்தி அறிவிக்க வேண்டியதில்லை. இதை PN தலைமையிடம் விட்டுவிட வேண்டும். தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை. எனவே, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wawasan கட்சியின் துணைத் தலைவர் ரஹிம் தம்பி சிக், BN உடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் மலாக்கா மாநிலத் தேர்தலில் PN அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறியிருந்ததைத் தொடர்ந்து கமாருடின் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மலாக்கா Wawasan தலைவருமான ரஹிம், BN உடன் உடன்பாடு ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் பெம்பான் மற்றும் சுங்கை ஊடாங் தொகுதிகளில் தனது கட்சி போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இந்த இரு தொகுதிகளும் முந்தைய தேர்தலில் பெர்சத்துவால் PN சார்பில் வென்றவை.

இதற்கிடையில், மலாக்கா BN தலைவர் அப் ரவுஃப் யூசோ, மாநிலத் தேர்தலுக்கான ஒத்துழைப்பை விரும்பும் கட்சிகள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நேற்று கேட்டுக்கொண்டார். PN மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) ஆகிய தரப்புகள் BN-ன் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

PH தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரியும், மலாக்கா தேர்தலில் BN கூட்டணியில் இணைய விரும்புகிறதா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று BN-ஐ வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles