27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஸ்ரீ கோம்பாக் இலவச மருத்துவ பரிசோதனை! 70 பேருக்கு நோய்த்தொற்று உறுதி!

🔥 Views : 8
👁 Reading Now : 38

சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை
கோம்பாக் பெரிங்கின் மண்டபத்தில் நடத்திய கோவிட்-19 பரிசோதனையில் புதிதாக 70 பேருங நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்ட 1,200 பேரில் எழுபதுக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கடந்த மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் போது அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான இடங்களை இலக்காக கொண்டு மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுங்கை துவா மற்றும் கோம்பாக் செத்தியா தொகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆறு முதல் ஏழு விழுக்காடு நோய்த் தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டன என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles