26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சொந்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் மலேசியா!

🔥 Views : 8
👁 Reading Now : 31

மலேசியா சொந்தமாக கோவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் மருத்துவ ஆய்வுக் கழகம் மற்றும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த தடுப்ப்பூசியை மேம்படுத்தும் பணி கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
தடுப்பூசியை மேம்படுத்தும் பணி முற்றுப் பெற்றவுடன் முன்பரிசோதனை நடவடிக்கையாக அது சிறிய மற்றும் பெரிய பிராணிகளுக்குச் செலுத்தப்பட்டு ஆக்கத்திறன் சோதிக்கப்படும்.
அதன் பின்னர் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு மூன்று கட்டச் சோதனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே அந்த தடுப்பூசியை பதிவு செய்யும் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles