29.6 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

தடுப்பூசி மையத்துக்கு செல்ல வசதி குறைந்த மக்களுக்கு இலவச போக்குவரத்து சேவை!

🔥 Views : 12
👁 Reading Now : 42

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் வசதி குறைந்த மக்கள் தடுப்புசி மையத்துக்குச் செல்ல இலவச போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
கிள்ளான் வட்டாரத்தில் உள்ள மக்கள் தற்போது கொம்ப்ளேக்ஸ் பண்டமாரன் மற்றும் டேவான் மேருவில் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.


இதில் வசதி குறைந்த மக்கள் இவ்விரு இடங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்..
கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் .
ஆகவே குறிப்பிட்ட தேதியில் அவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு இந்த இலவச போக்குவரத்து சேவையை ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles