29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

துணையமைச்சர் இல்லத்தில் தந்தையர் தின கொண்டாட்டம் !விசாரணை தொடங்கியது

🔥 Views : 11
👁 Reading Now : 41

மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் வீடமைப்பு ஊராட்சித்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் இல்லத்தில் நடைபெற்ற தந்தையர் தின கொண்டாட்டம் தொடர்பில் பகாங் மாரான் மாவட்ட சுகாதார அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் ஸம்ரி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். அவர் இல்லத்தில் நடந்த தந்தையர் தின உபசரிப்பில் 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் முகக் கவசம் அணிந்துள்ளனர்.
இருப்பினும் mco காலத்தில் மாரான் நாடாளுமன்ற உறுப்பினருமான இவரது இல்லத்தில் நடந்த தந்தையர் தின கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles