31.3 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

14 நாள் கால அவகாச கெடுவை திசை திருப்ப வேண்டாம்!

🔥 Views : 21
👁 Reading Now : 56

மாட்சிமை தங்கிய மாமன்னர் கட்டளைக்கேற்ப 14 நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி காலக்கெடு விதித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் படி அரசாங்கத்தை அம்மனோ வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக 14 நாட்களுக்குள் அரசாங்கம் இதனை செய்தே ஆகவேண்டும்,
இல்லையெனில் ஆட்சியாளர்களுக்கு பெரிய அவமதிப்பை ஏற்படுத்தியதாக அது கருதப்படும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்று கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தை கூட்டுவதாக இருந்தால் 28 நாள் நோட்டீஸ் வழங்கப்பட வேண்டுமென பெர்லிஸ் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் கூறியிருப்பதை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் சர்காஸி கண்டித்துள்ளார்.
அம்னோ தலைவரின் 14 நாட்கள் காலக்கெடுவை திசை திருப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
சபாநாயகர் நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என்று டத்தோ புவாட் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles