29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த அவர் மீது ஏற்கெனவே 14 குற்ற புகார்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 69

பினாங்கு மாநிலத்தில் ஆடவர் ஒருவர் குழந்தைக்கு மதுபானம் கொடுத்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய மலிவு விலை மது தடுப்பு இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல், பிறை காவல் துறையில் புகார் அளித்திருந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த ஆடவர், நேற்று மதியம் 1.30 மணிக்கு தென் மேற்கு மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டதாகவும் தென் மேற்கு மாவட்ட காவல்துறை தலைவர் காமருல் ரிசால் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் அந்த ஆடவர மீது
ஏற்கெனவே 14 குற்றவியல் தொடர்புடைய சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles