26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நாட்டின் சூழ்நிலையை கருதி பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் பதவி விலக வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 42

பல்வேறு சூழ்நிலைகளை எதிர்க்கொண்டு நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவதால்,அதற்கு முழு பொறுப்பேற்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பதவி விலக வேண்டுமென பாடாங் செராய் செராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா தெரிவித்தார்.
இவரது தலைமைத்துவத்தில் நாடு தற்போது கல்வி,பொருளாதாரம்,சுகாதாரம் ஆகியவற்றில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகிறது.
குறிப்பாக
கோவிட் – 19 தொற்றை ஒழிப்பதில் அரசாங்கம் தோல்வியை கண்டுள்ளது என்றார்.இந்த ஒழிப்பதில் பல உலக நாடுகள் வெற்றிக் கண்டுள்ளன என்றார். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு,மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றார்.
மாணவர்களின் கல்வி நிலையும் உறுதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு,உடனடியாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்து விட்டு திறமையான தலைவர் ஒருவரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்றார்.
எனவே மாமன்னரின் கட்டளையை மதித்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென எம்.கருப்பையா கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles