
ஐந்து மாதம் நிரம்பிய குழந்தைக்கு மதுபானம் கொடுத்த சம்பவம் தொடர்பில் ஆடவரை போலீசார் கைது செய்திருப்பதாக மலேசியத் தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.
பினாங்கு தெலுக் பகாங் குடியிருப்பு பகுதியில் ஆடவர் ஒருவர் குழந்தைக்கு மதுபானம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட ஆடவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மலேசிய மலிவு மதுபான துடைத்தொழிப்பு நடவடிக்கை இயக்கத்தின் தலைவரும் மலேசிய தமிழ் குரல் தலைவருமான டேவிட் மார்ஷெல் போலீசில் புகார் செய்தார்.
இதனிடையே விசாரணைக்காக சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.
இந்த காட்சியை வீடியோ மூலமாக வைரலாக்கியவர் மீது சம்பந்தப்பட்டவர் புகார் செய்து இருக்கிறார் என்றும் டேவிட் தெரிவித்தார்.



