25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

மாமன்னரின் ஆலோசனை கேட்ப நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் அம்னோவின் கூற்று வரவேற்கக் கூடியது!

மாட்சிமை தங்கிய மாமன்னர் இன் கட்டளைக்கேற்ப 14 நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருப்பது வரவேற்க கூடியது என்று பேராக் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய அரசியல் அதிகாரி தினகரன் குறிப்பிட்டார்.
கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் படி அரசாங்கத்தை அம்மனோ வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக 14 நாட்களுக்குள் அரசாங்கம் இதனை செய்தே ஆகவேண்டும்,
இல்லையெனில் ஆட்சியாளர்களுக்கு பெரிய அவமதிப்பை ஏற்படுத்தியதாக அது கருதப்படும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்று கூறியிருந்தார்.
தேசிய முன்னணி கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ம இ கா மற்றும் மசீச கட்சிகள் அம்னோவின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை.
மாமன்னர் தலைமையில் நடைபெற்ற ஆட்சியாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என்பதே முடிவாகும். அந்தவகையில் அம்னோவின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது என்றார் அவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles