28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

ஜொகூர் பாரு,கெம்பாஸ் இம்பியான் இமாஸ் தமிழ்பள்ளி நில விவகாரம் எதையும் சந்திக்கத் தயார் ஜொகூர் சந்திரசேகரன் சவால்

🔥 Views : 10
👁 Reading Now : 40

இங்குள்ள ஜோகூர் கெம்பாஸ்,இம்பியான் இம்மாஸ் வாட்டாரத்தில் அடையாளம் காணப் பட்டதாக கூறப்படும் நிலத்தில் பள்ளியை எழுப்பும் முயற்சியில் இறங்காமல் தன்னை தாக்கி வாட்சப் புலனத்தில் பேசுவதை சுப்பையா நிறுத்தி கொண்டு ஒரு தரமான தலைவராக நடத்துக் கொள்ள வேண்டும் என ஜொகூர் மாநில ஜசெக சந்திர சேகரன் ஆறுமுகம் கேட்டு கொண்டார்.
கடந்த 30 ஆம் தேதி ஏஎஸ்டி செய்திலும் பத்திரிக்கையிலும் இம்பியான் இம்மாஸ் தமிழ்பள்ளி நிலம் கை நழுவி விடக்கூடாது என்ற செய்தியின் எதிரொலியாக ஜொகூர் மாநில மஇ கா துணை தலைவரும்,மாநில இந்திய குத்தகையாளர் சங்க தலைவரும் மற்றும் கூலாய் தொகுதி தலைவருமான சுப்பையா சோலைமுத்து தரம் தாழ்த்தி தன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுப்பது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல என ஆ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அந்த இம்பியான் இம்மாஸ் தமிழ்பள்ளியை தொட்டு தனது பத்திரிக்கை அறிக்கைகளுக்கு பதில் அளிக்க மாநில ஆட்சிகுழு உறுப்பினர் வித்யானந்தனுக்கு பொறுப்பு உள்ளது,
அந்த அடிபடையிலேயே தனது பத்திரிக்கை அறிக்கை அமைந்தது என மேலும் அவர் கூறிப்பிட்டார்.


ஒரு வேளை நான் கூறுவது போல் அந்த நிலம் இல்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டும்.
மேலும் இல்லாத ஒரு இடத்தை இருக்கு என்று கூற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்பதை முதலில் புரிந்து தனது மாநில ம இ கா சகாக்களுடன் கலந்து ஆலோசித்து நிதானமாக செயல்பட வேண்டும்.
அதை விட்டு தனது சொந்த பணியை சுப்பையா கையாளக்கூடாது.
மேலும்,எனது செய்தி பொய் என்றால் முறையாக எனது மீது நடவடிக்கை எடுக்கலாம் அதை சந்திக்க தம் தயார் என தனது அறிக்கையில் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles