25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

பினாங்கு ஆளுநர் பிறந்தநாள்; விருதுகள்,பட்டங்கள் வழங்கும் விழா ஒத்திவைப்பு

2021 -ஆம் ஆண்டு பினாங்கு ஆளுநரின் பிறந்தநாளை முன்னிட்டு
விருதுகள்,பட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் அறிவித்துள்ள தேசிய மீட்சி திட்டம் மற்றும்
பினாங்கு மாநிலத்தில் கோவிட் – 19 தொற்று பாதுகாப்பு நலன் கருதி
இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ
லோவ் சூ கியாங் தெரிவித்தார்.
இந்த விருதுகள்,பட்டங்கள் வழங்கும்
விழாவுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இருப்பினும் ஜூலை
10 -ஆம் நாள் ஆளுநர் துன் அகமட் புஸி அப்துல் ரசாக் அவர்களின் 72 ஆவது
பிறந்தநாள் கொண்டாட்டமும்,பினாங்கு மாநிலத்தில் பொது விடுமுறையும்
அனுசரிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles