
கடந்த 2014 ஆம் ஆண்டில் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த கமருல்னிஸாம் இஸ்மாயில் எனும் தொழிற்சாலை ஊழியரின் குடும்பத்திற்கு 3 லட்சம் வெள்ளியை இழப்பீடாக வழங்கும்படி இன்று மேல் முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது
அலட்சியம் காரணமாக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வெள்ளியும் உரிமைகோரலுக்கு 40 ஆயிரத்து 800 வெள்ளி யும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனது மகனின் மரணத்தைத் தொடர்ந்து, இழப்பீடு வழங்குமாறு அவரது 71 வயது தாய் ரஹாயா சல்லேஹ் மனுவை விசாரித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யாகோப் சாம் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் குழு இந்த தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்புக்காவலில் மரணமடைந்த குடும்பத்தின் சார்பில் கமரூல்னிஸாம் சார்பில் வழக்கறிஞர் எம். விஸ்வநாதன் ஆஜரானார்.
