31.8 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மூன்று மருத்துவமனைகளில் கட்டில்கள் அதிகரிப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 42

நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை மற்றும் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைகளில் கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாசுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சாதாரண வார்டுகளில் உள்ள கட்டில்களை தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களாக மாற்றப் பட்டு வருகிறது.
கோவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்களில் கட்டில்களை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
இதனிடையே கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக ஷா ஆலம் மருத்துவனையை தகுதி மாற்றம் செய்வது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலத்து வருகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles