
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தடுப்பூசி போடும் திட்டத்தை தீவிரப் படுத்தி உள்ளது. தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுகாதாரத் துறை பொறுப்பாளருமான டாக்டர் சித்தி மரியா தெரிவித்தார்.
தற்போது தடுப்புசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளின் எண்ணிக்கைகேற்ப தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் கூடுதல் தடுப்பூசி மையங்களை உருவாக்குவதில் மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது. தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திறன் பெற்ற மருத்துவர்கள் மற்றும் தாதியரும் தேவைப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.


