
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சிப்பாங் தாமான் முர்னியில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக தொடங்கியது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தடுப்பூசி போடும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் சிவகுமார் இந்த வட்டாரத்தில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை மற்றும் தடுப்பூசி பதிவு மேற்கொள்ளப்பட்டது தொடர்பில் டத்தோஸ்ரீ அமிருடினுக்கு விளக்கம் அளித்தார்.
இங்குள்ள மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடர்பான விளக்கங்களை டாக்டர் நாசிர் தெரிவித்தார்.
நேற்று முதல் கட்டமாக 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இன்று மேலும் 500 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு விண்ணப்பம் செய்து பல மாதங்கள் காத்திருந்த வேளையில் இப்போது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தடுப்பூசி கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக திருநாவுக்கரசு என்பவர் மந்திரி பெசாரிடம் தெரிவித்தார்.
சண்முகம் என்பவர் கூறுகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தால் இங்குள்ள மக்களுக்கு விரைந்து தடுப்பூசிகள் கிடைத்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.




