
நாய்களை கொடூரமாக கொன்ற நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கருப்பையா கேட்டுக் கொண்டுள்ளார்.
கூலிம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள நாய்களை கூலிம் நாகரான்மை கழகம் அதிகாரிகள் கொடூரமாக கொல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

அப்பாவி மிருகங்களை ஈவு இரக்கமின்றி கொன்ற இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்
இந்த கொடூரத்தை புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மிருகங்கள் பராமரிப்பு இயக்கங்களும் புகார் அளிக்க முன்வர வேண்டும்.
ஒரு நாயை கொடூரமான முறையில் நகராண்மைக் கழக அதிகாரிகள் கொள்ளும் காட்சியை பார்த்து நாடு தழுவிய அளவில் மக்கள் புகார்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
தமது அலுவலகத்தில் நாய்களை பிடித்து சென்ற கூலிம் நாகரான்மை கழக அதிகாரிகள் அந்த நாயை கொன்றுள்ளது குறித்து பெண்மணி ஒருவரால் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



