31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

கலிடோனியா தோட்ட மக்களுக்கு எகோவெல்ட் நிறுவன தலைமை நிர்வாகி உதவிக்கரம்

🔥 Views : 9
👁 Reading Now : 65

கோவிட் -19 தொற்றின் காரணமாக,அரசாங்கம் அமல்படுத்தியுள்ள முழு அடைப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் காரணத்தால் வேலைகளுக்கு செல்ல முடியாமல்,வருமானத்தையும் இழந்து தவிக்கும் பி40 மக்களின் நிலைமையை அறிந்து,தென் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள கலிடோனியா தோட்டத்தைச் சேர்ந்த 120 குடும்பங்களுக்கு எகோவெல்ட் ஹரிசோன் செண்டிரியான் பெர்ஹாட் மேம்பாட்டு நிறுவனத்தின் டிவிஷினல் தலைமை நிர்வாகி துவான் சான் சூ ஹோவ் ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கப் தோட்டத்திற்கு வருகையளித்த இவர் தமது அலுவலகப் பணியாளர்களுடன் இணைந்து உணவுக் கூடைகளை எடுத்து வழங்கினார்.தற்போது எம்சிஓ காலக்கட்டத்தில் மக்கள் எதிர்நோக்கி வரும் துயரில் நாமும் பங்கெடுத்து,மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்நிறுவனம் முன்வந்து இந்த சமூகப் பணியை செய்ததாக நிகழ்வின் ஏற்பாட்டாளருமான இவர் கூறினார்.
இந்த எம்சிஓ காலத்தில் மக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை பின் பற்றி நடந்துக் கொள்ள வேண்டுமென கலிடோனியா தோட்ட மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles