
சிலாங்கூரில் மாநிலத்தில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நோய்த்தொற்று மருத்துவ பரிசோதனையே காரணம் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தீவிர கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கையே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இம்மாதம் 5ஆம் தேதி 19,614 பேருக்கும் 6ஆம் தேதி 25,005 பேருக்கும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த தினங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பங்கேற்றோர் எண்ணிக்கையும் மேலும் அதிகரித்ததாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அடாம் பாபா கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தற்போது நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளது. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியிலும் பி.கே.பி.டி. பகுதிகளில் பரிசோதனை கொள்வதிலும் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம் என்றார் அவர்.



