
சிலாங்கூர் மாநில பரிவுமிக்க அரசாங்கத்தின் சார்பில் சித்தம் மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் மூலம் இந்திய வியாபாரிகளுக்கு உதவ ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்திய தொழில் வியாபாரிகளுக்கு உதவும் வகையில் மாநில அரசாங்கம் சித்தம் மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்திய வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவர்கள் தங்களது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாநில அரசாங்கத்தின் சார்பில் சிறப்பு கடனுதவி வழங்கப்படுகிறது அந்த வகையில் சிலாங்கூர் இந்திய வியாபாரிகளுக்கு உதவ ஒரு கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் சித்தம் -ஹிஜ்ரா சிலாங்கூர் திட்டத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் சுவான் ரோட்ஷியா இஸ்மாயில் ஆகியோர் இன்று இணையம் வாயிலாக இந்த கடனுதவி திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்கள்.
நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவும் வகையில் ஹிஜ்ரா சிலாங்கூர் செயல்பட்டு வருகிறது.
பல வணிகர்கள் மற்றும் சிறுதொழில் வியாபாரிகள் தங்களது வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள்.
கடுமையான சவால்களை எதிர்நோக்கி இருக்கும் இவர்களுக்கு உதவும் வகையில் ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவி திட்டத்தின்கீழ் கடனுதவிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
