
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மலேசியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 20,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
