
பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுடீன் அப்துல் ரஹ்மான் அம்னோ தேர்தல் இயக்குனர் பதவியில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இவருக்கு பதில் புதிய தேர்தல் இயக்குனராக துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் நியமிக்கப்பட்டார்.
டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் நியமனம் உடனடியாக நடப்புக்கு வருகிறது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, கட்சியின் அந்த முக்கியப் பதவிக்கு டத்தோஸ்ரீ தாஜுட்டின் நியமிக்கப்பட்டபோது டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியின் நம்பிக்கைக்குரிய நபராக அவர் காணப்பட்டார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்ள அம்னோ எடுத்த முடிவுக்கு இவர் உடன்படவில்லை என்று தெரிகிறது
இதனிடையே தமது பதவி பறிக்கப்படுவது குறித்து கருத்துரைத்த டத்தோஸ்ரீ தாஜுதீன் அம்னோ தலைவருடன் தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இந்த முடிவை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்வதாக அவர் சொன்னார்.



