
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு இல்லை என்று சபா வாரிசான் கட்சி அறிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சபா வாரிசான் கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.
சரவாக் ரிப்போர்ட் நேற்று வெளியிட்ட செய்தி ஒன்றில் பெர்சத்து கட்சியைத் தோற்றுவித்த துன் டாக்டர் மகாதீர் அந்தக் கட்சியோடும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுடன் மீண்டும் இணையலாம் என ஆரூடம் கூறியிருந்தது.
கொவிட் தொடர்பான தேசிய மீட்சித் திட்டக் குழுவுக்கு துன் மகாதீர் தலைமையேற்கலாம் என்ற ஆரூடத்தையும் சரவாக் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. தேசிய மீட்சித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் அந்தத் திட்டக் குழுவில் இணைந்து பணியாற்றத் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், எனினும் அது குறித்து, தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பெர்சத்துடன்
பெர்ஜூவாங் இணையலாம் என்று கூறப்படும் தகவல்களை கட்சியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் மறுத்திருக்கிறார் என பெர்ஜூவாங் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் உல்யா அகாமா ஹூசாமுடின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் சபா வாரிசான் கட்சியும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது .
வரும் ஜூலை 26ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் வேளையில் இப்போது அரசியல் நிலவரம் பரபரப்பாக இருக்கிறது.



