26.4 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

நான் எப்போது SOP மீறினேன்? அனுவார் மூசாவுக்கு சைபுடின் சவால்!

🔥 Views : 31
👁 Reading Now : 59

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியுடன் நான் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்களை கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா வெளியிட்டுள்ளார்.
சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜோகாரியும் இந்த படத்தில் இருக்கிறார்.
Emco காலகட்டத்தில் நாங்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதால் Sop விதிமுறைகளை மீறி விட்டதாக அனுவார் மூசா குற்றம் சாட்டியுள்ளார்.
டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி எனது 30 ஆண்டுகால நண்பர்.
அனுவார் மூசா வெளியிட்டிருக்கும் இந்த படம் எப்போது எந்த தேதியில் எந்த ஆண்டில் பிடிக்கப்பட்டது என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.
இவருக்கு இந்த படம் எப்படி கிடைத்தது. இது புதிய படமா அல்லது பழைய படமா என்பதையும் அவர் விளக்க வேண்டும்.
நாங்கள் மூவரும் எந்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்பதையும் அவர் உறுதிப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் அவருக்கு முழு விளக்கத்தைத் தரத் தயார் என்று சைபுதீன் நசுத்தியோன் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles