32 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

நூர் ஹிஷாமை பதவி விலக சொன்ன அஸ்மின் சிறப்பு அதிகாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

🔥 Views : 11
👁 Reading Now : 58

நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று இதன் எண்ணிக்கை 11,000ஐ தொட்டது.
இந்நிலையில் இந்த எண்ணிக்கை உயர்வுக்குச் சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா காரணம் என்பது போல் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் சிறப்பு அதிகாரி அட்லின் சப்ரி சாடினார்.
டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா நடப்பு கோவிட் சூழலைச் சரியான முறையில் கையாளத் தெரியவில்லை என்ற ரீதியில், அவரைப் பதவி விலக வேண்டும் என்று அட்லின் சப்ரி சாடியுள்ளார்.
இதனையடுத்து அவருக்குப் பொதுமக்கள் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அட்லின் உட்பட அஸ்மினையும் பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles