28.4 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

சிலாங்கூர் அரசின் ஒரு கோடி வெள்ளி கடனுதவி திட்டம்!- இந்திய வணிகர்கள் வரவேற்பு

🔥 Views : 35
👁 Reading Now : 64

சிலாங்கூர் மாநில பரிவுமிக்க அரசாங்கத்தின் சார்பில் சித்தம் மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் மூலம் இந்திய வியாபாரிகளுக்கு உதவ ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் சித்தம் -ஹிஜ்ரா சிலாங்கூர் திட்டத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் புவான் ரோட்ஷியா இஸ்மாயில் ஆகியோர் இந்த கடனுதவி திட்டத்தை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்கள்.
வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்ட இந்திய தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல், மானியம் மற்றும் வர்த்தக உபகரணங்களை வழங்குவதை இலக்காக கொண்ட இந்த சித்தம் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டது.
இவ்வாண்டும் இந்திய வணிகர்களுக்கு உதவும் வகையில் ஒரு கோடி வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூர் அரசின் இந்த கடனுதவி திட்டத்தை பெரிதும் வரவேற்பதாக கிள்ளான் லிட்டல் இந்தியா இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்லஸ் மாணிக்கம் தெரிவித்தார்.
இந்தக் கடனுதவியை பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டாம்.
நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் வணிகர்களின் சுமையை குறைக்க இந்த கடனுதவி திட்டம் பெரிதும் துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடைய இந்த திட்டம் தொடர்பில் ஹிஜ்ரா சிலாங்கூர் அகப்பக்கம் வாயிலாகவும் 016-951 2458 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles