
கிள்ளான் பள்ளத்தாக்கில் நோய்த்தொற்று அதிகரிப்பதற்கு டெல்டா வகை திரள் பரவலே காரணம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்
நேற்று நாட்டில்
11,079 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
நாட்டில் பதிவான நோய்த்தொற்று சம்பவங்களில் இதுவே மிக அதிகமாகும்.
சிலாங்கூர் மாநிலத்தில் 5,263 சம்பவங்கள், கோலாலம்பூரில் 1,521 சம்பவங்கள் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 1,033 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டது
ஜூன் 1-ம் தேதி முதல், கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
10 நாட்களுக்குள் 9,020லிருந்து 4,000 மாக குறைக்க முடிந்தது.
ஆனால், இப்போது அது மீண்டும் அதிகரித்து வருகிறது.
அந்த அதிகரிப்பின் காரணம் டெல்டா கோவிட் -19 திரள் வகையாகும் என்று அவர் கூறினார்.



