28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

தைரியமிருந்தால் ஆதரவை மீட்டுக் கொள்ளுங்கள்!

🔥 Views : 11
👁 Reading Now : 35

ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த 4 பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மேற்கொள்ளப்போவதாக கூறுகிறார்கள்.
உண்மையிலேயே தைரியமிருந்தால் ஆதரவை மீட்டுக் கொள்ளுங்கள் என்று அந்த நான்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அம்னோ உச்சமன்றம உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி சவால் விடுத்தார்.
தைரியமிருந்தால் ஆதரவை மீட்டுக் கொள்ளுங்கள். அதை விடுத்து மிரட்டி கொண்டிருக்க வேண்டாம் என்று அவர் சாடினார்.
பெர்சத்துவை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவில் இணைய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சரியான நேரத்திற்காக இவர்கள் காத்துக் கொண்டிருப்பதாக டத்தோ புவாட் ஸார்காசி தெரிவித்தார்.
ஆகவே ஆதரவையும் மீட்டுக் கொள்வோம் என்று கூறும் 4 பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தைரியமிருந்தால் இதை செய்ய வேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles