34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

விஷம் கொடுத்து குரங்குகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை தேவை

🔥 Views : 6
👁 Reading Now : 60

கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி விஷம் கொடுத்து ஒன்பது குரங்குகள் உயிரிழக்க காரணமானவர்களை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
இந்த மனிதாபிமானமற்ற செயலை புரிந்திருக்கும் நபர்களை கண்டுப் பிடித்து அவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுசாரா இயக்கத்தின் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஜூன் 26 -ஆம் தேதி கிராண்ட் வியூ ஆடம்பர அடுக்குமாடி முன்புறம்,விஷம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் 9 குரங்குகள் துடிதுடித்து இறந்துக் கிடைக்க காணப்பட்டன.இது சம்பந்தமாக அன்றைய இரவு சுமார் 7.45 மணியளவில் பாதுகாவலர் ஒருவர் போலீஸ் புகார் செய்திருந்ததை போலீசும் உறுதிப்படுத்தியது.
சம்பவம் நடந்து சுமார் மூன்று வாரங்கள் ஆகிய நிலையில்,சம்பந்தப்பட்டவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருவது ஆச்சரியமாக உள்ளது என பினாங்கு மாநில உரிமைக்குரல் இயக்கத்தின் தலைவர் க.இராமன்,பினாங்கு மாநில இந்தியர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் தமிழ் மறவன் மு.பாலன் இருவரும் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு,எந்தவொரு கருணையும் காட்டாமல் போலீசாரும்,விலங்கியல் துறையும் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles