
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவதற்கு அதரவு தெரிவித்தால் பெர்ஜூவாங் கட்சியை ஏற்றுக்கொள்வோம் என்று கெஅடிலான் இளைஞர் பிரிவு அறிவித்துள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராக ஏற்றுக்கொண்டால் துன் டாக்டர் மகாதீர் தலைமையான பெர்ஜூவாங் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று கெஅடிலான் இளைஞர் பிரிவு செயலாளர் அமாட் சுக்ரி தெரிவித்தார்.
பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மட்டுமே வேட்பாளர் என்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று பெர்ஜூவாங் மற்றும் சபா வாரிசான் கட்சிகள் இப்போது அறிவித்துள்ளன..
வரும் 26ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. இனி வரும் நாட்கள் அரசியலில் பரபரப்பாக இருக்கலாம் என்று வர்ணிக்கப்படுகிறது.
