
நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை 20,000 ஆக உயரலாம் என்று டாக்டர் குமிதா தேவதாஸ் எச்சரித்துள்ளார்.
மரபணு மாற்றம் கண்ட டெல்டா வைரஸ் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மலேசியா அறிவியல் பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் குமிதா தேவதாஸ் தெரிவித்தார்.
இதர வைரஸ்களை காட்டிலும் இந்த டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது.
இது அதிகமானோருக்கு நோய்த்தொற்றை பரப்பும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
இதனை சமாளிக்கும் ஆற்றலை சுகாதார அமைச்சு கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் தினசரி நோய் தொற்றினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 200 ஆக உயரலாம் என்று அவர் கூறினார்.
