29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் கட்ட மீட்சி நிலைக்கு நாடு திரும்பலாம்

🔥 Views : 23
👁 Reading Now : 20

மலேசியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தப் பட்டிருப்பதால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாடு இரண்டாம் கட்ட மீட்சி நிலைக்கு திரும்பும் சாத்தியம் இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
10 விழுக்காட்டிற்கும் கூடுதலான மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டால் நாடு இரண்டாம் கட்ட மீட்சி நிலைக்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தேசிய மீட்சித் திட்டத்தின் ஒன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு மாறுவதற்கு பத்து விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமயாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அவர் தெரிவித்தார்.
நேற்றுவரை 11.8 விழுக்காடு மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles