31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பேரா மாநில ஐபிஎப் கட்சிக்கு 500 உணவுக் கூடைகள் உதவி

🔥 Views : 9
👁 Reading Now : 59

கோவிட் – 19 தொற்று சூழ்நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் பொருட்டு,பேரா மாநில மந்திரி புசாரின் சார்பில், மாநில ஐபிஎப் கட்சிக்கு 500 உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
அவற்றை மாநில ஐபிஎப் தலைவர் வி.மாணிக்கம்,அனைத்து தொகுதிகளுக்கும் பகிர்ந்தளித்தார். முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணத்தால்,வேலைகளுக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ஐபிஎப் கட்சி மேற்கொண்ட முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் பேரா மாநில மந்திரி புசார் டத்தோ ஷாராணி பின் முகமட் இந்த உதவியை வழங்கினார் என அவர் கூறினார்.
இந்த உணவுக் கூடைகளை,மாநிலத்தின் அனைத்துத் தொகுதித் தலைவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டதாக சொன்னார். இந்த பொருள் பகிர்ந்தளிப்பின் போது பேரா மாநில மற்றும் தேசியப் பொருளாளரான எம்.சுப்பிரமணியமும் உடனிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles