
கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பண்டார் கூச்சிங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ தெரிவித்தார்.
இந்த அமைச்சரவையில் அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா உறுதியளித்த போதிலும் அது நடக்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தை அமைச்சரவை விவாதிக்கும் என்பதால், பொறுமையாக இருக்குமாறு ஒப்பந்த மருத்துவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
இருப்பினும் இன்றுவரை, சம்பந்தப்பட்ட ஒப்பந்த சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையோ அல்லது உத்தரவாதமோ வரவில்லை.
ஒப்பந்த மருத்துவ ஊழியர்களுக்கு நியாயமான தீர்வுகாணக் கோரி, அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.



