28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பண்டர் புக்கிட் திங்கியில் 2,875 பேரிடம் புதன்கிழமை கோவிட் பரிசோதனை

🔥 Views : 10
👁 Reading Now : 28

பங்சாபூரி பண்டார் புக்கிட் திங்கி (1) கிள்ளான் பகுதியில் Emco எனப்படும் கடுமையான மக்கள் நடமாட்ட உத்தரவு ஜூலை 18-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தேசிய பாதுகாப்பு மன்றம் பிறப்பித்துள்ளது. நோய்த்தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இங்கு 998 வீடுகளில் வசிக்கும் 2,875 பேரிடம் கோவிட் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கிள்ளான் மாவட்ட அதிகாரி ஜைனால் முகமட் நோர் தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனையின் போது நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கு வரும் சனிக்கிழமை தடுப்பு ஊசி செலுத்தப்படும்.
மேலும் அனைத்து வீடுகளுக்கும் உணவு கூடைகள் விரைந்து அனுப்பப்படும் என்றார் அவர்.
இதனிடையே இங்குள்ள மக்களுக்கு விரைந்து கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுவரவேற்கக் கூடியது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். இங்குள்ள மக்கள் பொறுமை காத்து போலீஸ் வழங்கும் அறிவுரைகளைக் கேட்டு எஸ்ஓபி விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இங்குள்ள மக்களிடையே நோய்த்தொற்றை கட்டுபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது சரியான நடவடிக்கை ஆகும்.
14 நாட்கள் வீட்டிலேயே இருக்கும் இங்குள்ள மக்கள் பொறுமை காத்து மருத்துவப் பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles