28.1 C
Kuala Lumpur
Saturday, July 25, 2026

Vetri

மனிதக் கடத்தல் முறியடிப்பு! 829 பேரைக் காவல்துறை மீட்டது

🔥 Views : 12
👁 Reading Now : 24

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை நாடு முழுவதும் 190 சோதனைகளில், மனிதக் கடத்தலை முறியடித்த போலீசார் 829 பேரை மீட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாலில் ஹசான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 74 பேர் பாதுகாப்பு ஆணைகளைப் பெற்றுள்ளனர், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 65 பேர் அவற்றைப் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 146 சோதனையில் 599 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையில் 44 சோதனைகளில் 230 பேர் மீட்கப்பட்டனர்.
மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், கடந்த ஆண்டு 243 பேரும், இவ்வாண்டு 110 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles