31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கிள்ளான் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்தது பிரிமாஸ்

🔥 Views : 7
👁 Reading Now : 32

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் உதவிகளை வழங்க முன் வந்துள்ளது.
“Dapur Rakyat Klang” எனும் தேவை படுவோருக்கு உணவு வழங்கும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ சேவை மையத்தின் சேவையை அறிந்து பிரிமாஸ் இந்த முயற்சிக்கு கைகொடுக்க தானாகவே முன்வந்துள்ளது.
தேவைபடுவோருக்கு உணவு வழங்கும் எங்களது இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்த பிரிமாஸூக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
தற்போது “Hailam Kopitiam Klang Bayu Perdana உணவகம் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வேலை மற்றும் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு உதவும் பொருட்டு
No 2A,Jalan Bayu Tinggi 8/KS6, Batu Unjur, Klang என்ற முகவரியில் திங்கள் முதல் வெள்ளி வரை உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கப்படுகிறது. பிற்பகல் மணி 12 முதல் 1 மணிக்குள் மட்டுமே உணவுகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles