31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

தோல்வி கண்ட அரசாங்கம் என்று முழக்கமிட்டு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் 200 இளைஞர்கள் பங்கேற்பு

🔥 Views : 9
👁 Reading Now : 43

தோல்வி கண்ட அரசாங்கம் என முழக்கமிட்டு 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு துரோகம் இழைத்த அமைச்சர், தோல்வி கண்ட அரசாங்கம் என முழக்கமிட்டு இவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தினால் டத்தாரான் மெர்டேக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அங்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர.
ஜாலான் மஸ்ஜிட் ஜாமிட் எல்ஆர்டி நிலையத்தின் முன் ஒன்று கூடி இருக்கும் கருப்புக் கொடி ஏந்திய இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் முழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles