28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

ரத்ததானம் செய்ய முன்வாருங்கள பொதுமக்களுக்கு ரத்த வங்கி அழைப்பு!

🔥 Views : 8
👁 Reading Now : 34

நாட்டில் தேசிய இரத்தம் வங்கியில் ரத்தம் குறைந்து வருவதால் பொதுமக்கள் ரத்த தானம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று வெளியிட்ட அறிக்கையில், தேசிய வங்கியில் இரத்தம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் பயன்பாட்டிற்கு வாரத்திற்கு சராசரியாக தேவைப்படும் இரத்தத்தின் அளவு 14,000 பைகள் ஆகும்,
தேசிய இரத்த மையம் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு வாரத்திற்கு 3,500 முதல் 4,000 பைகள் தேவைப்படுகிறது.
தற்போது நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக, தேசிய அளவில் இரத்த சேகரிப்பில் கணிசமான அளவு குறைந்து விட்டது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles