29.6 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

11 கோடியே 40 லட்சம் வெள்ளி சொத்துகள் நஜிப் -அம்னோவிடம் ஒப்படைப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 41

கடந்த 2018 ஆண்டில் கோலாலம்பூர் பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 11 கோடியே 40 லட்சம் வெள்ளி மதிப்புடைய சொத்துக்கள் மீண்டும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த சொத்துக்கள் ஜூன் 17ஆம் தேதி சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க பட்டிருப்பதாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் பாத்தின் தெரிவித்தார்.
இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்வதற்கு செய்யப்பட்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 20ஆம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும் இதை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles