26.4 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் 280 இந்திய மாணவர்களுக்கு 10 லட்சம் வெள்ளி கல்வி நிதி

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 280 மாணவர்களுக்கு 9 லட்சத்து 98 ஆயிரத்து 750 வெள்ளி கல்வி நிதி வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதிராவ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு நிதியதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு கொண்டுள்ள அக்கறையை இந்த கல்வி நிதியுதவித் திட்டம் புலப்படுத்துவதாக கணபதி ராவ் தெரிவித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை 741 இந்திய மாணவர்கள் இந்த நிதியுதவி மூலம் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதியைப் பெற்றவர்கள் அதனைத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை. மேலும், இந்த தொகை சம்பந்தபட்ட மாணவர்கள் பயிலும் உயர்கல்விக் கூடங்களின் பெயரில் வழங்கப்படுவதால் வேறு நோக்கங்களுக்கு இந்தியை பயன்படுத்துவற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles