
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிக்கப் போகிறீர்களா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறீர்களா ? என்பதை நாளை
ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவியுங்கள் என்று அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அம்னோ உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அரசாங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து தேசிய முன்னணி நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு அம்னோ தலைமைத்துவம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள பாரத்தில் தங்களின் பதிலை எழுதி
அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொடுள்ளதாக அம்னோ தலைமைச்
செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
கடந்த 2021 ஆகஸ்ட் 3 ஆம் தேதி அம்னோ உச்சமன்றம் எடுத்த முடிவின்படி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்
மற்றும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கான ஆதரவையும் மீட்டுக்
கொள்ளும் முடிவை அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் மதிக்க வேண்டுமென அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.
