28.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

நாடாளுமன்றத்திற்கு செல்ல முயன்றபோது போலீசார் எம்பிக்களை தடுத்து நிறுத்தினர்

🔥 Views : 39
👁 Reading Now : 57

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முயன்றபோது எங்களை எல்லாம் தடுத்து நிறுத்தியது போலீஸ்காரர்கள்தான் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் பேரணியில் பங்கேற்றதற்காக என்னிடம் போலீஸார் 45 நிமிடம் விசாரணை நடத்தினார்.
Sop விதிமுறைகளை மீறி இதில் கலந்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
நாங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள்.
அந்த வகையில் நாடாளுமன்றத்திற்கு நாங்கள் செல்ல முயன்றபோது போலீசார் எங்களைத்
தடுத்து நிறுத்தினார்கள்.
எங்களை விசாரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
கொலை மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் அதை விடுத்து எங்களை விசாரணை நடத்துவதே தேவையில்லாத ஒன்று என அவர் குறிப்பிட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles