33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

அம்னோவின் கடிதத்திற்கு பதில் கொடுக்க மாட்டேன் டத்தோஸ்ரீ நஸ்ரி அறிவிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 61

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிக்கப் போகிறீர்களா அல்லது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறீர்களா ? என்பதை நாளை
ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவியுங்கள் என்று அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அம்னோ உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளைக்குள் இவர்கள் தங்கள் பதிலைஎழுதி
அனுப்பி வைக்குமாறு அம்னோ தலைமைச்
செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2021 ஆகஸ்ட் 3 ஆம் தேதி அம்னோ உச்சமன்றம் எடுத்த முடிவின்படி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்
மற்றும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கான ஆதரவையும் மீட்டுக்
கொள்ளும் முடிவை அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் மதிக்க வேண்டுமென அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த கடிதத்திற்கு பதில் வழங்கப் போவதில்லை என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles