
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு இப்போது 100க்கும் குறைவான எம்பிக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று குறிப்பிட்டார்.
தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்றால் அவர் இந்நேரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி இருப்பார்.
ஆனால் அவருக்கு இப்போது 100க்கும் குறைவான எம்பிக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது என்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக்காட்டினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு 31 தேசிய முன்னணி எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது தினந்தோறும் குறைந்து கொண்டிருப்பதாக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக்காட்டினார்.
