
அம்னோ எதிரி கும்பலுடன் இப்போது துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இணைந்திருப்பதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி தெரிவித்தார்.
அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உண்மையிலேயே கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் ஆனால் இப்போது அவர் மாறுபட்டு இருக்கிறார் என்று அவர் சாடினார்.
அம்னோவுக்கு எதிராக இருக்கும் கும்பலுடன் அவர் இணைந்திருக்கிறார் என்று அவர் கூறினார்.
அம்னோ கட்சி எடுத்த முடிவுக்கு இவர் எதிராக இருக்கிறார்.
தேசிய முன்னணி சார்பில் 31 எம்பிக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் ஒமார் மற்றும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அஜிஸ் ஆகியோர் மறுத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
