34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பெரிக்காத்தான் கதை முடிவுக்கு வந்துவிட்டது! 42 ஜசெக எம்பிக்கள் அணி தாவ மாட்டார்கள்

🔥 Views : 5
👁 Reading Now : 32

பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்து விட்டு கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வந்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் ஆட்சி முடிக்கு வந்துவிட்டது.
ஜசெகவை சேர்ந்த 42 எம்பிக்களை விலை கொடுத்து வாங்கும் என்று கனவு காண வேண்டாம் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் சாடினார்.
எங்களுடன் இணைந்தால் அமைச்சர் பதவியும் கோடிக்கணக்கான தொகையும் காத்துக் கொண்டிருப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கொண்டிருக்கிறார்கள். இதற்கு நாங்கள் மயங்கி விட மாட்டோம் என்று அவர் சொன்னார்.
மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் துரோக செயல் முடிவுக்கு வந்துவிட்டது.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டது.
ஆகவே எங்களை வாங்குவதற்கு இப்போது பேரம் பேசப்பட்டு வருவதாக அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles