25.7 C
Kuala Lumpur
Saturday, September 26, 2026

Vetri

வசதிக் குறைந்த 60 குடும்பங்களுக்கு லஹாரி மெல்பேரா நிறுவனத்தின் உணவு கூடைகள்

🔥 Views : 20
👁 Reading Now : 46

பினாங்கு மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரபல வர்த்தக நிறுவனமான லஹாரி மெலிபெரா குழுமத்தின் ஏற்பாட்டில் தென் செபெராங் பிறை,சிம்பாங் அம்பாட் பகுதியில் வசிக்கும் வசதிக் குறைந்த 60
குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
இங்குள்ள தாமான்
புத்ரி குனோங்,தாமான் முத்தியாரா,தாமான் எங்காங்,தாமான் மெராக் உட்பட பல பகுதிகளில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக நடமாட்டக்
கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக மக்கள் பல்வேறு நிலைகளில்
பலவிதமான பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அவர்களின் சிரமத்தில் தாமும் பங்கேற்று,தேவையான உதவிகளை வழங்க வழங்கி
வருவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் இராமதாஸ்
குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற டிவிஷன் 60
கை கொடுக்கும் கைகள் புலனக்குழு ஒத்துழைப்பு நல்கியது என்பது
குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles