29 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் டாக்சி ஓட்டுனர் சங்க தலைவர் முத்துவின் சேவை அளப்பரியது!

🔥 Views : 7
👁 Reading Now : 70

நாட்டில் ஏற்பட்ட நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலேசிய மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் முத்து தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.
பல நண்பர்களிடம் உதவிகளைப் பெற்று அவர் வசதி குறைந்த மக்களுக்கு உதவி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த வகையில் கடந்த வார இறுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர் காய்கறிகளை வழங்கி உதவியுள்ளார்.
கடந்த மாதமும் 70 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி இவர் இப்போது 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகளை வழங்கியிருக்கிறார்.
எங்களுடன் இணைந்து காயாமாஸ் கானோபி நிறுவனம்
செலாயாங் பசார் போரோங்கில் காய்கறிகளை கொண்டு வந்து வசதி குறைந்த மக்களுக்கு உதவுகிறது.
மலேசிய மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் சூரியமூர்த்தி, நாகா, ராவ், காளிமுத்து மற்றும் கோலாலம்பூர் காளி சேர்ந்த ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
மேலும்
பத்துகேவ்ஸ் வட்டத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் சிவா தலைமையில் வசதி குறைந்த மக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டதாக முத்து தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles