
இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் முதல் நேற்று வரை நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 9,918 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 471 ஆக இருந்தது. இப்போது அதிக அளவில் அதிகரித்துள்ளது.
இவ்வாண்டில் பதிவான மரணச் சம்பவங்களில் 8,081 மருத்துவமனைகளிலும் 819 சம்பவங்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலும் நேர்ந்தவை..
இந்நோய்த் தொற்றினால் இறந்த அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை 484 ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
